யாழ்ப்பாணம் அராலி பகுதியில் விபத்து! - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேருந்தில் சென்ற நிலையில், குறித்த பேருந்தானது மரம் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூவர் காயமடைந்துள்ள நிலையில், யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam