குடையுடன் மோட்டார் சைக்கிள் ஓடியதனால் நிகழ்ந்த விபரீதம்: மூவர் படுகாயம்
யாழ்.சாவகச்சோி பகுதியில் மழைக்குக் குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடிச் சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மழை பெய்து கொண்டு இருந்ததால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் குடை பிடித்தவாறு பயணித்துள்ளார்.
அதன் போது ,திடீரென வீசிய காற்றினால் , குடையுடன் மோட்டார் சைக்கிளில் ஓட்டி , நிலை தடுமாறி எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானர்.
அதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அவர்களுடன் மோதி
விபத்துக்குள்ளானவருமாக மூவர் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
