நுவரெலியா பிரதான வீதியில் பேருந்து மற்றும் கெப்ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் 79 வது மைல் கல்லறிகில் இன்று (25 .4.2026)சுமார் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பகுதியிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த கெப்ரக வண்டியும் ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
கெப்ரக வண்டியின் சாரதிக்கு வானத்தினை கட்டுப்படுத்த முடியாமல்போனதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam