வெற்றிலைக்கேணி பகுதியில் விபத்து: பொலிஸாரால் தடுக்கப்பட்ட ஊடகவியலாளர்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு இணைய ஊடகவியலாளரை பொலிஸார் தடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (23.02.2024) இடம்பெற்ற விபத்தின் பின்னரே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
மருதங்கேணி பொலிஸார்
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மருதங்கேணி பொலிஸார் சீருடையிலும் சிவில் உடையிலும் வந்திருந்தனர்.
சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு இணைய ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த பொலிஸார் தடுத்தது நிறுத்தி அவரது தொலைபேசியையும் பறித்து அதில் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர்.
தலைக் கவசம்
மேலும், அவரது ஊடக அட்டை மற்றும் மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறிது நேரத்தில் மீண்டும் ஒப்படைத்துள்ளதுடன் அவர் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை பணி செய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய பொலிஸார் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிவில் உடையில் வந்த பொலிஸார் தலைக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
