உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்துள்ள பரிதாபம்! சிறுமி பலி
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஹஜ் பெருநாள் தினமான நேற்று (29.06.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம் - அரபா நகரில் இருந்து உறவினர்களின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர்.
வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள்
இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், தந்தை, தாய் மற்றும் ஒன்றறை வயது கைக்குழந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
