திருகோணமலையில் விபத்து: ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து
திருகோணமலையில் இருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பவுசர், ஹொரவ்பொத்தானையிலிருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் என்பன மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான அம்பலாந்தொட - தெஹிகஹலந்த பகுதியைச் சேர்ந்த எஸ்.பீ.எஸ்.சுசந்த (42 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இந்த நிலையில் அவர் இரு கால்களும் உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



