நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்று, தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வானுடன் மோதி விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி, வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் குடைசாய்ந்த வானில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலைக்கு சென்று கொண்டிருந்த வானில் ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
