முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் - நான்கு வாகனங்கள் சேதம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் காரொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
அப்பகுதியில் சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனங்களை அவதானிக்காது தென்பகுதி நோக்கி பயணித்த கார் தரித்து நின்ற வானுடன் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான வான், அதன் முன்னால் தரித்த நின்ற மோட்டார்சைக்கிளுடன் சென்று எதிரே நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
