விபத்தில் சிக்கிய 29 வயது இளைஞன் உயிரிழப்பு
மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பொலிஸ் பிரிவுகுட்பட்ட மஹவெஹெர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தளையிலிருந்து கலேவெல நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்சாரத் தூண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபரை கலேவெல வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும் குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
