யாழ். நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து - ஒருவர் பலி: மூவர் வைத்தியசாலையில்
குருநாகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாவூர்தியொன்றின் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுளள நிலையில் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை சம்பவத்தில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த நிலாந்த கோசல (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
