கொட்டகலை நகர பகுதியில் விபத்து - மூவர் படுகாயம்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை நகர உள்வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற மோட்டர்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் மோட்டர்சைக்கிளில் சென்ற இருவரும், முச்சக்கரவண்டி சாரதியுமே காயமடைந்துள்ள நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
