கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் விபத்து: ஒருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(04-09-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் என்ற 25 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு பின்னால் அதிக வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam