விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்! ஆபத்தான நிலையில் இளைஞர்
களுத்துறை - மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞரொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (23.04.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த போது, மீன் வாங்குவதற்காக, கல் அஸ்ஹேன சந்தியில் தாம் பயணித்த உந்துருளியை நிறுத்தியுள்ளனர்.
பாரவூர்தி மோதி விபத்து

அதன்போது, களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று இருவரையும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் யுவதி உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் களுத்துறை - வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி சாரதி கைது

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri