விபத்தில் சிக்கி ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழு நாட்களாக சிகிச்சை
குறித்த நபர் கடந்த ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (28.09.2022) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞர் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

21 வயது இளைஞர்
சம்பவத்தில் யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan