காரொன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் காரொன்றுடன் மோட்டர்சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்தி சென்ற ஆதம்பாவை முகமது அம்ஹர் (21 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இதில், படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், விபத்து தொடர்பில் காரை செலுத்திய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
