புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
இலங்கையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று (27.05.2024) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு இணையவழி விண்ணப்பம் நிறுத்தப்படும். விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பத்திற்கான இணைய முகவரி
அரச பாடசாலைகள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் தேர்வில் பங்கேற்க முடியும்.
WWW.ONLINEEXAMS.GOV.LK என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
