கோறளைப்பற்று மத்தியில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றல்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கோவிட் - 19 தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டுள்ளன.
கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய சகோதரி, குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் 14 சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில்
நடைபெற்று வருகின்றது.




தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam