ஜெர்மனியில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்:வெளியான தகவல்
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 934 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 38 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளதுடன்,ஒரே நாளில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 98 ஆயிரத்து 194 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றிலிருந்து 44.77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 4.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் பெருந்தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.