யாழ். அராலி சந்தியில் விபத்து: இளைஞர் ஸ்தலத்தில் பலி
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் (18.03.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரால் கைது
ஊர்காவல்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பட்டா ரக வாகனம், பேருந்தொன்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதியான இளைஞர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan