யாழ் காங்கேசன்துறை - காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பம்!
யாழ். காங்கேசன்துறை - காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு - குடியகல்வு சாவடி
இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு - குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.
முதலில் 120 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிப்பார்கள் எனவும், அவர்கள் 100 கிலோகிராம் பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு ஒருவருக்கு சுமார் 40
ஆயிரம் ரூபா வரிக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri