பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண ஏற்பாடு
பிரதமர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் நிவாரண ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புகளை அறிந்து கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பட்டப்பின் கற்கைகளுக்கான பட்டமளிப்பு விழா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு, பொறியியல் கண்காட்சி என்பன பிற்போடப்பட்டுள்ளன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan