இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் கட்டார் விமான சேவை
கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டார் விமான சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆகக் குறைந்த வயது எல்லை 21ஆகவும், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவராகவும், அம்மொழியில் சிறப்பாக உரையாடக் கூடியவராகவும் விண்ணப்பதாரர் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்வாய்ப்பு விண்ணப்பங்கள்

உயர் கல்வியைக் கற்றவர்கள், ஆரோக்கியமானவர்கள், சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள், பன்னாட்டுக் குழுக்களுடன் பணியாற்றக் கூடியவர்கள் இந்த பதவிக்கு தகுதியுடையவர்களாக கணிக்கப்படுவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை https://careers.qatarairways.com/global/en/job/230000A5/Cabin-Crew-Recruitment-Colombo-Sri-Lanka-2023 என்ற இணைதளம் ஊடக பெற்றுக்கொள்ள முடியும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri