டிட்வா சூறாவளியால் காணாமல் போனவர்கள் குறித்து வெளியான தகவல்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக இறந்த அல்லது காணாமல் போனவர்களின் தகவல்களை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பேரிடரின் விளைவாக ஒருவரின் உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டால், அத்தகைய காணாமல் போனவர்களின் இறப்புகளை அதிகார பூர்வமாக பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆட்சேபனைகளுக்கு
திணைக்கள தகவலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள், தொடர்புடைய சட்டத்தின்படி 2025 டிசம்பர் 02 அன்று அதிவிசேட வர்த்தமானி;யின் மூலம் வெளியிடப்பட்டன.
இந்த விதிகளின் கீழ் காணாமல் போனவரின் மரணத்தைப் பதிவு செய்வதற்கு, தேவையான தகவல்களைக் கொண்ட விண்ணப்பப் படிவம், உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்துடன், காணாமல் போனவர்; கடைசியாக வசித்த பகுதியின் கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிராம அலுவலர் விண்ணப்பத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
பின்னர், கோரிக்கை பொதுமக்களின் ஆட்சேபனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பிரதேச செயலகம் மற்றும் அந்தந்த கிராம அலுவலர் அலுவலகம் இரண்டிலும் காட்சிப்படுத்தப்படும்.
பாதகமான வானிலை
எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிக்கப்பட்ட அலுவலகத்துக்கு பொறுப்பான துணை அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பார்.

இந்தநிலையில் ஆட்சேபனைகள் எழும் சந்தர்ப்பங்களில், பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டம் மிகவும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் நதீரா ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri