தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது

P Ariyanethran Ranil Wickremesinghe India Sri Lanka Presidential Election 2024
By Nillanthan Sep 15, 2024 07:45 AM GMT
Report

பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம்.அதனால்,பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள்.

அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்.இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார்.

அதனால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள்.அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது.

பொதுக் கட்டமைப்பு

அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார்.

எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது.

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது, அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை.அதனால் சந்தேகம் மேலும் கூடியது.

மேற்சொன்ன சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது, பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது.

அதேசமயம் பொது வேட்பாளரைக் கண்டு பயப்படும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியானது அதனை வேறுவிதமாக அணுகியது.சுமந்திரன் இந்தியத் தூதுவரை சந்தித்து பொது வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை தனக்கு விசுவாசமான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியே கொண்டு வந்தார்.

அந்தச் செய்திகள் யாவும் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை; தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளரோடு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு கேட்கிறது என்பதைச் சாராம்சமாகக் கொண்டிருந்தன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்

தமிழரசு கட்சிக்குள் சிறீதரன் அணி பொது வேட்பாளரை வலிமையாக ஆதரிக்கிறது.சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான மோதலுக்குள் பொது வேட்பாளர் எப்பொழுதோ சிக்கிவிட்டார்.

இந்நிலையில் சிறீதரனை பலவீனப்படுத்துவதற்காகவும் பொது வேட்பாளரைப் பலவீனப்படுத்துவதற்காகவும் இந்தியா பொதுவேட்பாளர் என்ற தெரிவைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை சுமந்திரனுக்கு நெருக்கமான பத்திரிகைகள் அடிக்கடி பிரசுரித்தன.

அதன்மூலம் சிறீதரன் இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தை செய்கிறார் என்பதை அவருக்கு குறிப்பாலுணர்த்த முற்பட்டன.

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

ஆனால் இந்த இடத்தில் அப்பாவித்தனமான ஒரு கேள்வி எழும்.பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்றால் பிறகு ஏன் இந்திய ராஜதந்திரிகளும் பிரதானிகளும் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள்?

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித்குமார் டோவால் கொழும்புக்கு வந்திருந்தார்.அவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

அச்சந்திப்பின்போது அவர் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு அதாவது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளும் கலந்து கொண்டன.

எனவே அக்கட்சிகளுக்கும் அவர் சொன்ன செய்தி அதுதான்.இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதனை அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றார்கள்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அவ்வாறு கூறிய பின்னரும் அது இந்தியாவின் ப்ரொஜக்ட்தான் என்று நம்புகிறவர்கள் இப்பொழுதும் நாட்டில் உண்டு.

வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்

இந்த விடயத்தோடு தொடர்புடைய மற்றொரு சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சிக்குச் சென்றார்கள்.அங்கு அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமாரை சந்தித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

.அதன்பின் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.மேற்படி சந்திப்பானது சிறீதரனுக்கு சில செய்திகளை உணர்த்தும் நோக்கிலானது என்று அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகின்றது.

சிறீதரனுடைய பலமான கோட்டையான கிளிநொச்சியில் அவருடைய அரசியல் எதிரியான சந்திரக்குமாரை அவருடைய அலுவலகத்திலேயே இந்தியத் துணைத் தூதுவர் தேடிச்சென்று சந்தித்து அவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தமை என்பதும்,சந்திப்பின்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு சூசகமாக வலியுறுத்தியமை என்பதும் சிறீதரனுக்கு சில விடயங்களை உணர்த்தும் நோக்கிலானவை.

அதாவது பொது வேட்பாளரின் விடயத்தில் இந்தியா ஆதரவாக இல்லை.எனவே பொது வேட்பாளருக்கு எதிராக சஜித்தை ஆதரிக்கும் சந்திரகுமாரை தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் இந்தியா சிறீதரனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முற்படுகின்றதா?

எனினும் அச்செய்தி வெளிவந்த பின்னர்தான் சிறீதரன் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.அவருடைய கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எவ்வாறு பொது வேட்பாளருக்கு ஆதரவான பணிகளை திட்டமிட்டுப் பரவலாக்கலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்தியாவின் நிலைப்பாடு

அதாவது சிறீதரன் பொது வேட்பாளரின் விடயத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்கிறார் என்ற செய்தி அந்த கூட்டத்தில் உண்டு. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதுவும் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியது.

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரியத்தொடங்கிவிட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ,கொழும்பில் உள்ள இந்தியத் தூதர்,யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதுவர் போன்றவர்கள் தென்னிலங்கையில் உள்ள யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்குமாறு கூறிவரும் ஒரு பின்னணியில்,பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று கூறுவது எந்த வகை அறிவியல்?

ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் 

அவ்வாறு சந்தேகிப்பவர்கள் மேலும் ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றார்கள். பொது வேட்பாளர் சஜித்தின் வாக்குகளைக் கவர்ந்தால் ரணில் வெல்வார்.எனவே ரணிலை வெல்லவைக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பொது வேட்பாளர் நிறைவேற்றுகிறார் என்று ஒரு வியாக்கியானம்.

முதலாவதாக ரணில் ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்புகின்றது என்பது சரியா? ரணில் விக்ரமசிங்க புத்திசாலி;தந்திரசாலி;முதிர்ச்சியானவர்.அவர் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துச் சமாளிக்கக் கூடியவர் என்பது ஒரு பொதுவான அவதானிப்பு ஆகும்.

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

அவ்வாறு எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்த பொழுது தெரிய வந்தது.

அதில் இந்தியா ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ் கட்சித் தலைவர்களை கேட்டிருந்தது.

கடந்த சில வார கால நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா வெளிப்படையாகவே சஜித்தை ஆதரிக்குமாறு கேட்கிறது என்று தெரிகிறது.

அப்படியென்றால் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று பொருள். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அணியை இந்தியா இயக்குகிறது என்று கூறுவது எந்த வகை அறிவியல்?

ரணிலை வெல்ல வைப்பதற்கான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைத்தான் பொது வேட்பாளர் முன்னெடுக்கிறார் என்ற சூழ்ச்சிக்கு கோட்பபாடு சரியென்றால் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிரமான நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிவாதத்தை தக்க வைக்க உதவும்.

பகிஷ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளருக்கு சாதகம்

அதன்படி மஹிந்த ராஜபக்சவை பலமாக வைத்திருப்பதுதான் முன்னணியின் மறைமுக நிகழ்ச்சி நிரல் என்ற சூழ்ச்சிக் கோட்பாடும் சரியா?அல்லது பகிஷ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோ ஒருவருக்கு சாதகமானது என்று வியாக்கியானப்படுத்தலாமா?

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் விழும் மொத்த வாக்குகளில் ஐம்பது விகிதத்துக்கு மேல் எடுப்பவர்தான் ஜனாதிபதியாக வரலாம்.ஆனால் தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் விழும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும்.

அதனால் விழுந்த வாக்குகளில் 50 விகிதம் என்பது ஒப்பீட்டளவில் குறையும்.அது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது. எனவே பாகிஸ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு சாதகமானது என்று ஒரு வியாக்கியானத்தைச் செய்தால் அதற்கு என்ன பதில்?

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

அதைவிட மேலும் ஒரு ஆழமான கேள்வியை இங்கு கேட்கலாம். உலகில் உள்ள எந்த ஒரு பேரரசும் அயலில் உள்ள சிறிய இனத்தை அல்லது நாட்டை ஒற்றுமைப்படுத்த விரும்புமா?அல்லது “டிவைட் அண்ட் ரூல்” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுபோல பிரித்துக் கையாள முயற்சிக்குமா?

தேசிய இனப்பிரச்சினைகள்

இந்தப் பூமிப் பந்தில் சிதறிப் போய் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒன்றாகத் திரட்ட வேண்டுமா இல்லையா? தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வை,தேசிய உணர்வை பலப்படுத்த வேண்டுமா இல்லையா?அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதானே தேசியவாத அரசியல்?

தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது | About Sri Lanka Prez Election Tamil Peoples

ஒரு மக்கள் கூட்டத்தை அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஒரு பக்கத்துப் பேரரசின் சதிவேலை என்று சந்தேகிக்கும் அறிவாளிகள் தங்களுடைய இனத்தை அவமதிக்கிறார்கள்;தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களை அவமதிக்கிறார்கள்.முற்கற்பிதங்களும் சந்தேகங்களும் ஊகங்களும் அவர்களுடைய அறிவை மழுங்கடித்துவிட்டன.

அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது சொந்த மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவகஞ் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகளே.எனவே அவற்றுக்கு உள்நாட்டுத் தீர்வு கிடையாது.அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.

அப்படிப் பார்த்தால் அனைத்துலகத்தில் ஆதரவு அணியைத் திரட்டாமல் தீர்வு கிடைக்காது.அனைத்துலகத்தைத் திரட்டுவதென்றால் முதலில் ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் தங்களைத் திரட்டாமல் அனைத்துலக சமூகத்தை எப்படித் திரட்டலாம் என்று யாராவது கூறுவீர்களா?


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 15 September, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US