சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்ட சுமார் 750 டிப்பர் லோட் கிரவல்! உடனடியாக விரைந்த பொலிஸார்

Police rushed immediately
By Independent Writer Apr 12, 2021 07:37 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத கிரவல் அகழ்வுக்கு எதிராக திணைக்களங்கள் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது.

இந்நிலையில் களத்தில் குதித்த ஒட்டுசுட்டான் பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டிருந்த சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்ததுடன், குறித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும், இதற்கு எதிராக திணைக்களங்கள் எதுவும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது.

இந்நிலையில், இன்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் குறித்த கிரவல் குவித்து வைக்கப்பட்டிருந்த இடங்களை பார்வையிட்டதோடு குறித்த இடம் தொடர்பிலும், இங்கு கிரவல் யார் அகழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் கிராம அலுவலர் ஒருவரே குறித்த கிரவல் அகழ்வை மேற்கொண்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த பகுதி கிராம அலுவலர் மற்றும் கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலர் ஆகியோரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்து இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கருவேலங்கண்டல் கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் அவர்கள் குறித்த காணி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும், அவ்வாறான நிலையிலேயே குறித்த காணியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்,அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலருடைய மனைவியினுடைய தந்தையின் காணி எனவும் ,தந்தையார் மகளுக்கு அதாவது கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலரின் மனைவிக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிக்கானஆவணங்கள் இல்லை எனவும், காணி ஆவணத்துக்கு பிரதேசத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பதாகவும், குறித்த கிரவல் அகழ்வுக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது தொடர்பிலும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த காணியின் உரிமையாளரான கிராம அலுவலருடைய மனைவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் இந்த அகழ்வு நடவடிக்கைக்காக எந்தவிதமான ஒரு அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும், காணியை விவசாய தேவைக்காக சுத்தம் செய்வதற்காக பிரதேச செயலகத்திற்கு செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்றின் பிரதியை மாத்திரம் காட்டிய நிலையில், குறித்த அகழ்வு மற்றும் களஞ்சியப்படுத்தல் சட்டத்திற்கு புறம்பாக செய்யப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த கிராம அலுவலருடைய மனைவி தற்போது ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US