இலங்கை வந்த இந்திய அணி: இணைந்த புதிய உப பயிற்றுவிப்பாளர்
புதிய பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய துணை பயிற்றுவிப்பாளர் அபிஷேக் நாயருடன் இலங்கை வந்தடைந்த இந்திய அணிக்கு சிறப்பான முறையில் வரவேற்களிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக 3 இருபதுக்கு20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
இருபதுக்கு20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு நாள் தொடரின் தலைமையை ரோஹித் சர்மா தொடர்வார்.
அபிஷேக் நாயர்
அதேவேளை, இந்திய அணியின் புதிய துணை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Indian Cricket Team left for Sri Lanka!#TeamIndia #GautamGambhir pic.twitter.com/bsKvUPpBpW
— Sportz Tube (@sportztube30) July 22, 2024
1983ஆம் ஆண்டு பிறந்த அபிஷேக் நாயர் ஐபிஎல் உட்பட பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் ஆலோசகராகவும் சிறப்பான முறையில் செயற்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிண்ணத்தை வென்ற கொல்கத்தா அணிக்கும் இவர் துணை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அபிஷேக்கின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்ததாக அந்த அணியின் வீரர்கள் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan