வெள்ளை வானில் வந்தவர்கள் சிறுவனை கடத்த முயற்சி
பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் நேற்று மாலை சிறுவனொருவரை கடத்தி செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.
கரந்தாய் பகுதியில் தாயுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவனை சிலர் கடத்தி செல்வதற்கு முயன்றுள்ளனர்.
கறுப்பு துணியால் முகத்தை மூடி வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத சிலரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தாய் சிறுவனை காப்பாற்றியுள்ளார். சம்பவத்தை பார்த்து வீதியால் சென்றவர்கள் அப்பகுதியில் திரண்ட போது குறித்த வாகனம் தப்பி சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
May you like this video

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
