முல்லைத்தீவு - கருணாட்டுக்கேணியில் கைவிடப்பட்டுள்ள பொது நோக்கு நிலையம்
முல்லைத்தீவு கருணாட்டுக்கேணியில் பொது நோக்கு தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபம் ஒன்று கைவிடப்பட்டுள்ளது.
ஜேர்மன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதியனுசரணையில் இந்த கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.
கருணாட்டுக்கேணியில் மீள் குடியேற்றத்தினைத் தொடர்ந்த ஆரம்ப காலத்தில் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களின் பல்நோக்கு செயற்பாடுகளுக்கு பயன்பட்டு வந்ததாக அதன் அயலில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கருணாட்டுக்கேணி விளையாட்டு மைதானத்தின் மேற்கு கரையில் இது அமைந்துள்ளது.
கவலைக்குரிய செயற்பாடு
இதன்படி நல்ல நிலையில் உள்ள இந்த கட்டிடம் எந்தத் தேவைக்கும் பயன்படுத்தப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இரண்டு சிறிய அறைகளையும் ஒரு பெரிய முன்தளவறையையும் கொண்டமைந்த இந்த கட்டிடம் புறாக்களின் தங்ககமாக இருக்கின்றதை அவதானிக்கலாம்.
மேலும், மாலை நேரக் கல்விச் செயற்பாடுகளுக்கு அல்லது பொருளாதார முயற்சிகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக வாசிகசாலையாக பயன்படுத்தலாம் என பலதரப்பட்ட முன்மொழிவுகளை விஞ்ஞானப் பாட ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
எனினும் இந்த கட்டிடம் பழுதடைந்து நாளடைவில் பயன்படுத்த முடியாதளவுக்கு சென்றுவிடும் என சமூக ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இந்நிலையில், துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
