அடாவடி அரசியலை கைவிடுங்கள்: சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளுக்கு சுரேஷ் எடுத்துரைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் அண்மைய நாடாளுமன்ற உரை இலங்கை நீதித்துறை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளினால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றதா என்கிற தமிழ் மக்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
"குருந்தூர்மலை விகாரையிலிருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிடும் அதிகாரம் முல்லைத்தீவு தமிழ் நீதிபதிக்குக் கிடையாது. குருந்தூர்மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது.
இலங்கை சிங்கள பௌத்த நாடு
அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை இந்த தமிழ் நீதிபதி மறந்துவிடக்கூடாது" என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (07.07.2023) ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் குருந்தூர்மலை என்பது புராதான பௌத்த சின்னங்களைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் சைவ வழிபாட்டிடங்களாகத் திகழந்த இடங்கள் சிலவேளைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் பௌத்தர்கள் வழிபட்ட இடங்களாக இருந்திருக்கலாம்.
வடக்கு-கிழக்கில் தமிழ் பௌத்தம் அழிவடைந்து மீண்டும் சைவம் தழைத்தோங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறான இடங்களில் பல நூற்றாண்டுகளாக சிவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கபளீகரம் செய்யப்படும் காணிகள்
இத்தகைய புராதான சின்னங்கள் உள்ள இடங்களைப் பாதுகாப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. புராதானச் சின்னங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அத்தகைய இடங்களில் புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதும் அதனைச் சுற்றியுள்ள காணிகளைக் கபளீகரம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, பௌத்த பிக்குகளும் தொல்பொருள் திணைக்களமும், இராணுவத்தினரும் இணைந்து புதிய புத்த விகாரை ஒன்றை கட்ட ஆரம்பித்தார்கள்.
அந்த விடயம் மீண்டும் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டபோது, நீதிபதி, தொல்லியல் திணைக்களம், சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நிலைமைகளை நேரடியாக அவதானிப்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.
மிக மோசமான சிங்கள பௌத்த இனவாதியான சரத் வீரசேகரவும் சில பௌத்த பிக்குகளுடன் அழையா விருந்தாளியாக அங்கு சென்றிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
