ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வழங்கிய கிரிக்கெட் வீரர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதனைகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச் செயற்பட்டு வருகின்றார்.
35 வயதாகும் ஆரோன் பிஞ்ச், இதுவரையில் 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை 17 சதங்கள் மற்றும் 30 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5401 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
எப்போது அணியிலிருந்து விலகுகின்றார்...?

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (11) இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சில முன்னணி வீரர்கள் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆரோன் பிஞ்ச்சின் இந்த அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan