ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் ஆறாம் நிலம்! கண்கலங்க வைக்கும் காட்சிகள் பல

Tamil People War Film Aaram Nilam
By Independent Writer Sep 24, 2021 10:00 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி காலப்பகுதியான 2009 இல் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் காலத்தால் அழிக்க முடியாத உண்மையாகும். 

இந்த நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை தேடும் பணியில் தொடர்ச்சியாக, அவர்களின் உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு நடுவில் தமது உறவுகளை தேடியபடியே உயிரிழந்தவர்கள் பலர். என்ற போதும் கையளிக்கப்பட்டவர்களின் நிலை இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்று அழைப்பது தான்.

இந்த நிலையில் யுத்தத்தின் பின் ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் முழுநீள திரைப்படமான ஆறாம் நிலம் ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணனால் இயக்கப்பட்டுள்ளது.

ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப்படாத ஒரு களம் தொட்டுள்ளது ஆறாம் நிலம். 

போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னரும் கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.

அந்த வகையில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல்போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.

முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நவயுகா மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப் போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் பெண்ணாக நவயுகா தோன்றியுள்ளார்.

அவருடைய பெண் குழந்தையாக தமிழரசி தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.

முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியும் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

கதையின் முடிச்சுகளுக்கு இறுதியில் முடிவு சொல்லாமல்விட்டதால் யதார்த்தம் மிளிர்கிரது.

திரைப்படம் தொடர்பான தனது அனுபவத்தை இயக்குனர் ஆனந்த ரமணன் கூறுகையில்,

“2009ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின் போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரண்டு தரப்பினருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

உயிர்பிழைத்தோர் ஏராளமானோர் அந்நாட்டு அரசிடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்தவர்கள் பலர் இன்றுவரை என்ன ஆனார்கள் என்றும், எப்படி இருக்கிறார்கள் என்றும் யாருக்குமே தெரியவில்லை.

அவர்களது குடும்பத்திற்குமே இது குறித்து தெரியாது. இதனை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காணாமல்போன தனது கணவரை கண்டுபிடிக்க அரசிடம் வலியுறுத்திவரும் ஒரு மனைவியின் பார்வையில் 'ஆறாம் நிலம்' எடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள வீடுகள், மனிதர்கள், சிதிலமடைந்த இடங்கள் என அனைத்தும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் அரசு இவர்களை ஏமாற்றுவது என இவர்களின் வலிகளை இப்படம் பேசியுள்ளது.

இப்படம் இன்று மாலை சரியாக ஏழு மணிக்கு ஐபிசி யூடியூப் தளத்தில் வெளியாகிறது” என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US