மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மன்னார் - மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, நேற்று(23.06.2026) மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் நிர்வாகம் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மடு அன்னையின் திருத்தலத்தின் போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட் சகோதர சகோதரிகள், இறைமக்கள் அடங்கலாக இறை வழிபாட்டோடு முதலாவது நவநாள் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
9 நாட்கள் திருவிழா
அதன் பின்னர், முதலாவது நவ நாள் வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வாக மருதமடு திரு தாயாரின் கொடி மற்றும் பாப்பரசரின் திருக்கொடிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையின் இறைவார்த்தை பகிர்வோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலை கள் தமிழ் - சிங்களம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு, வழமையின் பிரகாரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம் எழுந்தேற்றம் செய்யப்பட்டு தமிழ் சிங்கள மொழிகளில் மறையுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மறையுரையினை தொடர்ந்து, தேவ அழைத்தலுக்கான ஜெபம் இரு மொழிகளிலும் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக நற்கருணை இறையாசீரானது, இறைமக்களுக்கு வழங்கப்பட்டு இரவு செபத்துடன் முதலாம் நாள் வழிபாடுகள் முடிவுற்றது.
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 2 ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் பக்திபூர்வமாக நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியில் முச்சக்கர வண்டிக்கு தீவைத்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு - விசாரணையில் வெளியான தகவல்