இராமபிரான் வழிபட்ட ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
ஸ்ரீ இராமபிரான் வழிபட்ட பெருமையினை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நேற்று வியாழக்கிழமை(24.07.2025) வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து, வேத பாராயணங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 15ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம் நாள் ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றுள்ளது.
பிதிர் கடன்
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, இராம பிரானால் வழிபட்டதாக கூறப்படும், வரலாற்று தொன்மையும், புகழும் மிக்க இந்த ஆலயத்தின் ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.

ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் தீர்க்கும் புண்ணிய தலமாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri