மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை வழிபாடுகள்
கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் ஆடி அமாவாசை வழிபாடுகள் இன்று அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு முன்னோர்கள் வரும் இன்றைய தினத்தில் பிதிர் கடன் செலுத்தினால் அது ஆண்டு முழுவதும் செலுத்துவதற்குரிய பலனை தரும் ஆடி அமாவாசை தினமாகும்.
விரதம்
தந்தையை இழந்தவர்கள் இன்று விரதம் இருந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகலில் ஈடுபட்டு தீர்த்தக்கரை கரையில் இருக்கும் ஆலய குருக்களிடம் எள்ளும் தண்ணீரும் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு அர்ச்சனை செய்து அரிசி, மரக்கறி தானம் வழங்கி நண்பகல் தீர்த்த மாடி ஆலயங்களில் வழங்கும் அன்னதானங்களை உண்டு தமது விரதங்களை முடிவுறுத்துவார்கள்.
பிதிர் கடன்
இதேவேளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் இன்று பெருமளவிலான அடியார்கள் கலந்து கொண்டு தமது பிதிர் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.





