நான்கு மணி நேரமாக ஏ9 வீதிக்கு பூட்டு! - பாதுகாப்பு தீவிரம் (Photo)
வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4 மணிநேரம் மூடப்படிருந்தது.
சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வினையடுத்து ஏ9 வீதியின் மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான பாதையும், நகரசபை வீதி, நூலக வீதி ஆகியன காலை 6.30 மணி தொடக்கம் காலை 10.30 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் அதி உயர் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் பலத்த
சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் நிகழ்வுகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்தன.







