கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழப்பு
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலுடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று மட்டக்களப்பு,கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு,புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வர ராஜாசதூசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam