திருகோணமலையில் டிப்பர் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை(Trincomalee) - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர், மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று(14.06.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், சேனையூர், 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வி.விதுர்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே மோதியுள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam