யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்படி அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
