முல்லைத்தீவில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் 22 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் (24.12.2023) நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 23 வயதுடைய இளைஞன் 22 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |