மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்துச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று மாலையில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்த 90 கிராம் கேரளா கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஐயங்கேணி - செங்கலடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
