மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்பு (Video)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்தேக்கத்தில் சடலமொன்று இன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இன்று காலை தனியார் வகுப்புக்காக தலவாக்கலை நகரத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
உயிரிந்த மாணவி இவ்வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்ற வேண்டியவர் எனவும் பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
எனினும், குறித்த மாணவியின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
