30 வருடங்களாக அவதிப்படும் இளைஞனின் சோகக் கதை
உள்நாட்டு போர் நிறைவுற்று வருடங்கள் பல கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், வறுமை மாறாமல் தொடர்கின்றது.
அவை கொக்குவில் ,யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் ஜெகநாதன் வசந்தகுமார் குடும்பத்தினருக்கும் துன்பத்தை தவிர வேறெதுவும் வாழ்க்கையில் இருந்ததாக அவர்களுக்கு ஞாபகம் இல்லை.
உதவிக்கு யாருமின்றி வறுமையோடும்,பிணியோடும் அடுத்த வேளை உணவுக்காக இன்னுமொருவரை எதிர்பார்த்து தமது வாழ்க்கையை கண்ணீருக்கு மத்தியில் கொண்டு செல்வதாக தமது துயரத்தை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
