கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
கொழும்பு, தெஹிவளை - அபோன்சு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் மற்றொருவருக்கும் இடையில் நேற்று முன் தினம் (04.12.2022) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இளைஞர் உயிரிழப்பு

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் தெஹிவளை - அபோன்சு மாவத்தையில் வசித்துவந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் (44 வயது) தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam