திருகோணமலையில் இளைஞரொருவர் அடித்துக் கொலை
திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்
சம்பவத்தில் திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து வந்த தேனுவர ஹென்றிகே விநோத் (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலஸ்தோட்டத்தில் ஒரு இசை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ள நிலையில் அதில் இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன் விளைவாக மரத்தடி பகுதியை சேர்ந்த (33 வயது) 3ம் கட்டை சந்தியில் நள்ளிரவு 3 மணியளவில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சிசிடீவி காணொளி மூலம் தெரியவருகிறது.
ஏற்கனவே இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞர் தாக்கப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணை முன்னெடுப்பு
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உப்புவெளி பொலிஸார் ஒருவரையும், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் ஐவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - ரொஷான்
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam