கோர விபத்தில் இளைஞன் பரிதாபாக பலி
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து கலென்பிந்துனுவெவ – அனுராதபுரம் பிரதான வீதியில் ஹிம்புதுகொல்லாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி இன்று கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
