முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri