படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாப்புக்கடை பகுதியிலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு ஹோட்டல் அருகே உள்ள காலி கிணற்றில் வீசப்பட்டது.
உயிரிழந்தவர் புரங்வெல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் வேறொரு நபருடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளதாப பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இதேவேளை, கலஹா பொலிஸ் பிரிவிலும் ஒரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது, 45 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கலஹா, பெல்வுட் காலனியில் வசிப்பவர் எனவும், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பலுடன் மது அருந்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கலஹா பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
