உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(12.08.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டில் நேற்று(11) அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையிட்டு சென்றதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட நகைக்கடை ஒன்றில் இருந்து இன்று (12) பெண்ணிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய சந்தேக நபரையும் சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கொள்ளை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam