யாழில் கொலை குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த நபரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று (02.07.2024) சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருதங்கேணி பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு தீக்காயங்களுக்கு உள்ளான 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பொலிஸாரின் விசாரணைகள்
அதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில், சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
