யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நேசராசா பனுசா என்ற பெண்ணே நேற்று(16) உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் - பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri